அரசு மருத்துவமனையின் அலட்சியம்.. நோயாளிக்கு குளுக்கோஸ் பாட்டிலை மாற்றும் தூய்மை பணியாளர்!

 
ஈரோடு அரசு  மருத்துவமனை

ஈரோடு அரசு பொது மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆண்கள் வார்டில் தரையை சுத்தம் செய்யும் போது நோயாளிக்கு குளுக்கோஸ் பாட்டிலை துப்புரவு பணியாளர் மாற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் குளுக்கோஸ் பாட்டிலை மாற்றி விட்டு அவர் மீண்டும் தரையை சுத்தம் செய்கிறார். இதுபோன்ற பணியில் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகாவிடம் கேட்டபோது, ​​இந்த சம்பவம் நேற்று நடந்தது. தரையை சுத்தம் செய்பவர் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

எனவே ஒப்பந்த நிறுவன மேலாளர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினோம். துப்புரவு பணியாளர் வேண்டுமென்றே இதை செய்தாரா? அல்லது யாராவது சொல்லி இந்தப் பணியில் ஈடுபட்டரா? என மேலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web