கிடைக்காத அரசு திட்டம்.. ஒரு பேருந்துக்காக நாள் முழுவதும் காத்திருப்பு.. வேதனையில் புளியங்குளம் மக்கள்!

 
புளியங்குளம் கிராமம்

மதுரை மாவட்டத்தை சேர்ந்த புளியங்குளம், அந்த மாவட்ட எல்லையில் விருதுநகரை ஒட்டி உள்ளது. இதனால் தங்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கவில்லை என  கிராம மக்கள் கூறுகின்றனர். கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் அருகாமையில் உள்ள விருதுநகரை நம்பியிருப்பதாக மாவட்டத்தின் கடைமடை பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

புளியங்குளம் மாவட்ட தலைநகரான மதுரைக்கு செல்ல நேரமில்லாமல் அலைந்து வருவதாகவும், போதிய குடிநீர் வசதி உள்ளிட்ட அரசின் எந்த திட்டங்களும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒரே ஒரு பேருந்தை மட்டுமே நம்பி தலைநகரை விட்டு வெகு தொலைவில் உள்ள புளியங்குளம் மக்கள், மதுரை மாவட்டத்தில் ஆட்சிக்கு உட்பட்டு உள்ளதாகவும், மற்ற எல்லாவற்றுக்கும் விருதுநகரையே நம்பியிருப்பதாகவும் கூறுகின்றனர். மதுரையில் இருந்து விருதுநகரை எல்லை நிர்ணயம் மூலம் சேர்த்தால் போதும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web