டிரான்ஸ்பர் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்... டிசி வாங்கிக் கொண்டு அதே பள்ளிக்கு சென்ற 113 மாணவர்கள்!

 
சீனிவாசன்

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதன் எதிரொலியாக அவரிடம் கல்விக் கற்ற பழைய பள்ளி மாணவர்கள் 113 பேர், அவர் மாறுதலாகி செல்லும் அதே பள்ளிக்கு டிசி  வாங்கிக் கொண்டு, போய் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், மஞ்சேரி மாவட்டம், பொனகல் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சீனிவாசன் 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அவர் ஆசிரியராக மட்டுமல்லாமல் மாணவர்களின் பாதுகாவலராகவும் இருந்தார். மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். யாராவது பள்ளிக்கு வரவில்லை என்றால், விசாரித்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வைப்பார்.

படிப்பில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களாக இருந்தால், பள்ளி நேரம் முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் சீனிவாசன் கடந்த ஜூலை 1ம் தேதி அக்காபெல்லிகுடாவில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பள்ளி பொனகல் கிராமத்தில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. ஆனால், ஆசிரியர் சீனிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டதை மாணவர்களால் ஏற்க முடியவில்லை. இதனால் மாணவர்கள் பலர், 'வேறு பள்ளிக்கு செல்லாதீர்கள் சார்' என கதறி அழுதுள்ளனர். ஆனால் அரசு உத்தரவு என்பதால் வேறு வழியில்லாமல் மாணவர்களுக்கு புரிய வைத்து பள்ளி மாறினார். 

அதன்பிறகு, தங்களுக்குப் பிடித்த ஆசிரியர் எந்தப் பள்ளிக்குச் சென்றாரோ அதே பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தனர். இதனால் ஆசிரியர் சீனிவாசன் சென்ற பள்ளியில் பொனகல் பள்ளி 133 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் உள்ள 250 மாணவர்களில் பாதி பேர், அதாவது 133 மாணவர்கள் தங்களின் ஆசிரியருக்காக பள்ளியில் சேர்வது இதுவே முதல் முறை. இப்படி ஒரு சம்பவத்தை எங்கும் கேட்டதில்லை. இது ஆச்சரியமாக உள்ளது,'' என, மாவட்ட கல்வி அலுவலர் யாத்தியா கூறினார்.

வகுப்பறை

இது குறித்து ஆசியர் சீனிவாசன் கூறுகையில், குழந்தையின் பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. ஒவ்வொரு மாணவரின் மனநிலையையும் புரிந்துகொண்டு என்னால் முடிந்தவரை அவர்களுக்குக் கற்பிப்பதைத் தவிர நான் எதுவும் செய்யவில்லை. அதை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் என்னை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்கள். மேலும், அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web