சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கியமான சட்ட மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை தற்காலிகமாக நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அத்துடன், தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா ஆகியவைகளுக்கும் ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
கடந்த மாதம் மொத்தம் 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது மேலும் 3 மசோதாக்கள் ஒப்புதல் பெற்றுள்ளதால், இதுவரை 12 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மொத்தம் 18 சட்ட மசோதாக்கள் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டிருந்தன. இதில், தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாவை மாநில அரசு பின்னர் திரும்பப் பெற்றது. மீதமுள்ள 5 மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் இன்னும் நிலுவையில் உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
