“ஆளுநருக்கு சொரணை இருந்தா ராஜினாமா செஞ்சிருக்கணும்” - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

 
ஆர்.எஸ்.பாரதி

“ஆளுநருக்கு சொரணை இருந்தால் ராஜிநாமா செய்யுங்கள்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக  பேசியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாலர் ஆர்.எஸ்.பாரதி, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பதவிக்காலம் முடிவடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் தற்போது கேஷுவல் லேபர் மட்டுமே, நிரந்தர ஆளுநர் கிடையாது. நிரந்தர ஆளுநராக இல்லாதபோது நாம் ஏன் ஆளுநர் உரையை வாசிக்க வேண்டும்? என மனம் ஏற்க மறுத்து அவரே வெளிநடப்பு செய்து விட்டார்.

ஆளுநருக்கு சொரணை இருந்தால் ராஜினாமா செய்யுங்கள். பெரியாரை விடவா மற்றவர்கள் தமிழ்த்தாயை அவமதித்துவிட்டார்கள் என அர்ஜுன் சம்பத் கூறுகிறார். அர்ஜுன் சம்பத் தான்தோன்றித்தனமாக பேசுபவர். அவருக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது.

ஆர்.எஸ்.பாரதி

பெரியாரைப் பழித்தவன் இந்த நாட்டில் இருக்க முடியாது. பெரியாரைப் பழித்தவனை மனிதனாக ஏற்க முடியாது. துணைவேந்தரை நியமிக்காததால் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன, இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளுநர் தான் என இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா?  

ஆர்.எஸ்.பாரதி

தற்போது ஸ்டாலின் வலியுறுத்துவதைப் போல, ஜெயலலிதாவும் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமனம் செய்ய வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் பலர் பேசுகின்றனர். மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் ஓட ஓட விரட்டியது தமிழ்நாடு என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே நீங்கள் தகராறு செய்ய செய்ய தி.மு.க மற்றும் முதலமைச்சரின் புகழ் உச்சமடையும்” என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web