அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!!

 
வந்தனா

கேரளா மாநிலத்தில்கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை காவல்துறையினர் சந்தீப் என்ற குற்றவாளியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர் சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஆவேசமான குற்றவாளி சந்தீப் அங்கிருந்த கத்திரிகோலால் மருத்துவமனையில் பணிசெய்து கொண்டிருந்த மருத்துவர் வந்தனாவை சரமாரியாக குத்தி விட்டார்.

வந்தனா

மருத்துவர்  வந்தனாவின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மருத்துவமனை பணியாளர்கள் போலீசார் என 5 பேரையும் குற்றவாளி கத்தியால் குத்தினார். இதனால் மருத்துவமனை முழுவதுமே அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் சுற்றி வளைத்து குற்றவாளியை பிடித்தனர். ஆனால் 11 இடங்களில் மருத்துவரை குத்தியதால்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சைக்கு வந்த ஒரு குற்றவாளி தாக்கியதில் பெண் மருத்துவர் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

வந்தனா

 இச்சம்பவத்தை கண்டித்து கேரளாவில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் விடுத்த செய்திக்குறிப்பில் மருத்துவமனையில் நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி  மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கேரளாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட  அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கேரளா முழுவதும் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினால் மருத்துவமனையில் மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் அவதிப்படும் நிலை உருவாகலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web