அரசுப் பேருந்தும், ஆம்னிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 24 பேர் படுகாயம்!

 
பேருந்து

 புதுச்சேரியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று  காரைக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  இன்று அதிகாலையில் கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. அப்போது பின்னால் வந்த ஆம்னி பேருந்து,  அரசு பேருந்து மீது மோதியது.

ஆம்புலன்ஸ்

இந்த ஆம்னி பஸ் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விபத்தில் பேருந்தில்  பயணம் செய்த 24 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web