பகீர்.. தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து... இளம்பெண் பலி... 10 பேர் படுகாயம்...!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்திலிருந்து-சிவகாசி நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை பண்டிதம்பட்டி பகுதியில் வசித்து வரும் தங்கமணி ஓட்டி வந்தார். இவர் விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியை அடுத்த அலுமேலுமங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த செவல்பட்டியை சேர்ந்த பெண் முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு வயது 23. இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருடன் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!