டிகிரி முடிச்சிருந்தா போதும்... பிரபல வங்கியில் 1036 காலிப்பணியிடங்கள்... ஜூன் 7 கடைசி தேதி!

டிகிரி முடித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் 1036 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐடிபிஐ வங்கி தற்போது காலியாக உள்ள 1036 எக்ஸிக்யூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, மொத்தம் 1,036 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திறமையும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக இப்பணிக்கு வரும் ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.29,000 முதல் ரூ.34,000
தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- மருத்துவ பரிசோதனை
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி/எஸ்டி/PwD/ESM பிரிவினர்களுக்கு ரூ.200 மற்றவர்களுக்கு ரூ.1,000.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/idbiemar23/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் மே 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.06.2023
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!