தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று சாதனை!

 
குகேஷ்
 தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளார். கனடாவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் அபார வெற்றி பெற்று, இந்திய கிராண்ட் மாஸ்ட்ரான  குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவில் நடைப்பெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அமெரிக்காவின் ஹிகாரு நகாமுராவுடன் மோதினார். இன்று 14வது நடைப்பெற்ற நிலையில், முன்னணியில் இருந்த குகேஷ், போட்டியை டிரா செய்தாலே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

குகேஷ்
இரு வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், போட்டியை டிராவில்  முடித்தார். இறுதியில் 9 புள்ளிகள் பெற்றிருந்த குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியை குகேஷ் பெற்றுள்ளார். அதே சமயம்  17 வயதான குகேஷ், கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web