பணி நேரத்தில் புல் மட்டை.. போதை ஆசாமியுடன் அட்ராசிட்டி செய்யும் போலீஸ் அதிகாரி!

 
ஆந்திரா போலீஸ்

குடிபோதையில் காவல்துறை அதிகாரிகள் அநாகரீகமான செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது போன்ற மற்றொரு வைரல் வீடியோ வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலில் குடிபோதையில் போலீஸ் அதிகாரி ஒருவர்  குடிபோதையில் இருக்கும் நபரை நடனமாடச் சொல்லி விசில் அடித்து ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலான வீடியோவில், பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி முற்றிலும் போதையில் இருப்பது போல் தெரிகிறது, அருகிலிருந்த குடிபோதையில் ஒரு நபர்  நடனமாடுகிறார். இதை போலீஸ்காரர் அருகில் அமர்ந்து அதை வேடிக்கை பார்க்கிறார். இந்த காட்சி மக்களை சிரிக்க வைத்த அதே வேளையில், காவல்துறையின் திறமையின்மை பற்றிய விவாதத்தையும் எழுப்பியுள்ளது. Glint Insights Media என்ற பயனர் இன்று தனது X தளத்தில்  இந்த வீடியோ வெளியிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web