’பெரும் ஏமாற்றம்’.. ரஷ்யா சென்ற பிரதமர் மோடி.. மறைமுகமாக சாடிய உக்ரைன் அதிபர்!

 
ஜெலென்ஸ்கி

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக விமர்சித்துள்ளார். பிப்ரவரி 2022 முதல், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று கூட உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட 5 முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலில் மட்டும் 3 குழந்தைகள் உட்பட 36 பேர் கொல்லப்பட்டனர். Kiev நகரம், Dnipro, Kirvi Rih, Sulovansk, Karmadros உள்ளிட்ட நகரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி நேற்று 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு நடத்தினார்.

மோடி ரஷ்யா புடின்

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி சந்தித்ததை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அவர் தனது X சமூக வலைதள பக்கத்தில், “இன்று ரஷ்யாவின் கொடூர ஏவுகணை தாக்குதலால் உக்ரைனில் 37 பேர் கொல்லப்பட்டனர். 170 பேர் காயமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய தலைவரின் சந்திப்பின் போது இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது பெரிய ஏமாற்று வேலை. இந்த தாக்குதல்கள் அமைதி முயற்சிகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் தலைவர் (பிரதமர் மோடி) நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், உலகின் இரத்தக்களரி குற்றவாளியான (ரஷ்ய அதிபர் புடின்) மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web