பெரும் பரபரப்பு.. தேர்தலை சீர்குலைக்க பெரும் திட்டம்? 17 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!

 
ஆந்திரா

ஆந்திராவில் கட்டப்பட்டு வரும் வீட்டில் வெடிபொருட்கள், கத்திகள், கோடாரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தலை சீர்குலைக்கும் வகையில் இவை பதுக்கி வைக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு, நடிகர் பவன் கல்யாண், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஷர்மிளா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பல்நாடு மாவட்டம், மாச்சேர்லா சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது ஜங்கமேஷ்வரபாடு கிராமம். இங்கு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. நேற்று அந்த வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள்  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

நாட்டு வெடிகுண்டு

போலீசார் விரைந்து வந்து அந்த வீட்டை சோதனையிட்டனர். சோதனையில், 17 நாட்டு வெடிகுண்டுகள், 3 கத்திகள், 9 கோடாரிகள், ஏராளமான இரும்பு கம்பிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். வீட்டின் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  ஆந்திராவில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தலை சீர்குலைத்து வீட்டில் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைக்க யாராவது திட்டமிட்டார்களா? அல்லது இங்கு ஏன் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன? இதில் யார் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தேர்தலின் போது பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web