பெரும் பரபரப்பு.. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. 2பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840 மெகாவாட் மற்றும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தற்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இருவர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வந்த நிலையில் இருவர் நிலக்கரி குவியலுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவர் குவியலுக்குள் புதைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!