அதிகாலையில் கோர விபத்து.. தாறுமாறாய் அலைகழிந்த பேருந்து... 13 பேர் படுகாயம்!

 
இலங்கை அரசு பேருந்து விபத்து

இலங்கையில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை அரசு பேருந்து ஒன்று நாகொட கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில்  13 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் களுத்துறை கலசேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

அதே திசையில் பயணித்த ஆட்டோ ஒன்று திடீரென தெற்கு நோக்கி திரும்ப முற்பட்ட போது , அதன் மீது மோதமால் இருக்க பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Gallery

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விபத்து  குறித்து காவல்துறையினர்  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

 

From around the web