சவுக்கு சங்கர் மீது செருப்பு வீச்சு... எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!

 
சவுக்கு சங்கர்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை விமர்சித்து வந்தார். மேலும் அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசினார். இந்நிலையில் கடந்த வாரம் சவுக் சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை அவதூறாக கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கோவை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

அவரது வாகனத்தில் 400 கிராம் கஞ்சா இருந்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை போலீஸார் தாக்கியதாக அவரது வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்படுவார் என்ற செய்தியறிந்த மகளிர் அமைப்பினர் திடீரென நீதிமன்ற வளாகம் முன் திரண்டனர். மதுரை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு மையம் என்ற மஞ்சள் பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீதிமன்ற வாசலில் இருந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் அமைப்பினர் உள்ளே நுழைய முடியாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது தூக்கிலிடு, தூக்கிலிடு, பாலியல் குற்றவாளி சவுக்கு சங்கரௌ தூக்கிலிடு என்றும் , பெண் போலீசாரை திட்டிய கஞ்சா சவுக்கு சங்கரை குண்டாசில் கைது செய், நீதி அரசர்களை இழிவுபடுத்திய சவுக்கு சங்கரை குண்டாசில் கைது செய் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சவுக்கு சங்கர் வந்த காவல் வாகனத்தின் மீது பெண்கள் தாங்கள் அணிந்திருந்த காலணியால் அடித்தும் துடப்பங்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web