பெரும் பரபரப்பு.. ஆட்சியர் அலுவலகம் முன் இளைஞர் தீக்குளிப்பு!

 
சங்கரசுப்பு

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதகுளத்தைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது 35). குடும்பத்தில் நிலவும் சொத்துப் பிரச்னை காரணமாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த சங்கரசுப்பு திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் எரிந்ததால், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த காவலர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

உடல் கருகிய நிலையில் இருந்த சங்கர சுப்புவை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web