பெரும் பரபரப்பு.. ஓட்டு போடுவது போல் வந்து இவிஎம் மெஷினுக்கு தீ வைத்த இளைஞர்.. வீடியோ வைரல்!

 
இவிஎம்

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


குஜராத் மாவட்டத்தில் 25 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், அசாமில் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 4 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில் மகாராஷ்டிர மாநிலம் சங்கிலி நகரில் உள்ள பாகல்வாடி என்ற கிராமத்தில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த இவிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்தார். பீதியடைந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த பரபரப்பு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web