பெரும் துயரம்... சென்னையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
சிந்து

இந்த தலைமுறையினர், தீராத மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிற போதும், அரசோ, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களோ, பெற்றோர்களோ இது குறித்து பெரியளவில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே ஒரு தலைமுறையை சீரழித்து வருகிறோம்.

பணம் சம்பாதிப்பது குறித்தும், சந்திரயான் போன்று அறிவியல் வளர்ச்சி குறித்தும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்தும் கவலைப்படுகிற நாம், வரும் சந்ததியினரின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கறைக் கொள்வதில்லை. வெகு இயல்பாய், தவறை உணர்ந்து, திருந்தி, கடந்து சென்ற தலைமுறை இப்போது கிடையாது. செல்போன் தராதது, தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்காதது என்று எடுத்ததற்கெல்லாம் மன அழுத்தத்தில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். 

சென்னையில் வீட்டு வேலை செய்யவில்லை என தனது தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி சத்திரம் ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் அதே பகுதியில் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு சிந்து(21)என்ற மகள் இருந்தார். இளம்பெண் சிந்து, செயின்ட் தாமஸ் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் எந்த வேலைகளையும்  செய்வதில்லை என சிந்துவை அவரது தாயார் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று நேற்றும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த சிந்துவை அவரது தாய் சுமதி, அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில், மதியம் சுமதி ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பிய போது, மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிந்துவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலை

இதனையடுத்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் டி.பி சத்திரம் போலீஸார். சிந்துவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, சிந்துவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முன்பு சிந்து எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.

அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிந்து தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web