பெரும் சோகம்...வாணியம்பாடி பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

 
விபத்து

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

செட்டியப்பனூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, பெங்களூரில் இருந்து சென்னை  நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.  இந்த கோர விபத்தில், அரசு பேருந்தின் ஓட்டுநர், உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை, தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநர் நதிம், வாணியம்பாடியை சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்  மற்றும் சென்னையை சேர்ந்த கிருத்திகா என்ற பெண் உட்பட 5  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜீவ் என்பவரும் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பேருந்து விபத்து

பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்து சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது மோதியதாக விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்தில் காயம் அடைந்தவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேருந்து விபத்து

விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க  மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web