பெரும் சோகம்.. அடுத்தடுத்து நீரில் மூழ்கிய பாட்டி, பேரன், பேத்தி.. குளிக்க சென்றபோது விபரீதம்!

 
பத்மா

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, மாகரல், செய்யாறு ஆற்றில், கடந்த மாதம் பெய்த கனமழையால், தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரும் நீர்வரத்து ஆணையத்தின் காரணமாக கடந்த 30 நாட்களாக பாலாற்றில் தடுப்பணையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் கடம்பர் கோயில் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மனைவி பத்மா, விடுமுறையில் சென்னையில் இருந்து வந்திருந்த பேரன் தீபக் மற்றும் பேத்தி வினிஷாவுடன் அருகில் உள்ள செய்யாற்றில் குளிக்க சென்றார். அவருடன் மருமகன் வினோத்தும் சென்றார். தண்ணீரில் குளித்த பத்மா, தீபக், வினிஷா ஆகியோர் திடீரென ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கினர். இதை பார்த்த வினோத் அவர்களை காப்பாற்ற முயன்றும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வினோத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உத்திரமேரூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மாகரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உத்திரமேரூர் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், உயிர்காக்கும் ஜாக்கெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் உடனடியாக ஆற்றில் மூழ்கி ஒவ்வொருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரே நேரத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் உயிரிழந்த தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக அப்பகுதியில் திரண்டு வந்து கதறி அழுதனர்.

தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாகரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் சென்ற தனது ஒரே மகன், மகள் தாய் என மூன்று பேரையும் இழந்த பெண் கதறி அழுதது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செய்யாறு ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும், ஆபத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தொடர்ந்து  குளிக்க சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!