பெரும் சோகம்... தொடர் கனமழையால் யாத்திரை சென்ற 10 பேர் பலி!

 
கனமழை
 


 
ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த  கனமழையால், மணிமகேஷ் யாத்திரை சென்ற 10 பக்தர்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் சம்பா மாவட்டத்தில் மணிமகேஷ் புனித யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் கலந்து கொள்ள  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். 

இந்நிலையில், மோசமான வானிலை, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளினால் அந்த மலையேறும் யாத்திரை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  இதுகுறித்து  அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளார் டிசி ராணா, மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டவர்களில் குறைந்தது 10 பக்தர்கள் பலியாகி இருப்பதாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 மேலும் "தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால், யாத்திரை மேற்கொள்ளப்படும் சம்பா மற்றும் பார்மோர் சாலை முடக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அனைவரும் மலைப் பாதைகளில் சிக்கியுள்ளனர். வானிலை சீரானவுடன், மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் மலையேறும் மீட்புக் குழுக்கள் அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை அங்கிருந்து சுமார் 6000 பக்தர்கள் மீட்கப்பட்டு சம்பாவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.  மேலும்  உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு சம்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

சம்பா மற்றும் பதான்கோட் இடையிலான நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பா - பார்மோர் பாதையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஹிமாசலப் பிரதேசத்தில் தற்போது வரை கனமழை சார்ந்த சம்பவங்களினால் 164 பேர் பலியாகி இருப்பதுடன்  40 பேர் மாயமாகியுள்ளனர். மணிமகேஷ் யாத்திரை மேற்கொண்டு பலியான பக்தர்களில் பெரும்பாலானோர் இவைகளால்  பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?