பெரும் சோகம்... பைக் , அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி கணவன், மனைவி உடல் நசுங்கி பலி!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வடகரை கிராமத்தில் வசித்து வருபவர்கள் 35 வயது பாலாஜி சித்ரா தம்பதியினர். இவர்கள் இருவரும் இன்று வேப்பந்தட்டையில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக வடகரையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
இருசக்கர வாகனம் வெண்பாவூர் காப்புக்காட்டு பகுதியில் வந்தபோது எதிரே பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிசெல்லும் அரசு பேருந்து மீது நேருக்கு நேர்மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பாரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் சின்னதம்பியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!