மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியான சோகம்!

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த மேல்வயலாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி. இந்நிலையில் விவசாய நிலத்துக்கு சென்று மின் மோட்டாரை இயக்கிய போது விவசாயி பெரியசாமி மீது மின்சாரம் தாக்கியது.
இதனை தொடர்ந்து பெரியசாமியின் அலறல் சத்தக் கேட்டு மனைவி அபிராமி சென்றுள்ளார். பின் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!