நாமக்கல்:அதிகாலையில் பெரும் சோகம்... கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்!

 
ராசிபுரம் விபத்து

இராசிபுரம் அருகே நடந்த கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கேரளாவை சேர்ந்த மரம் வியாபாரி மார்த்தாண்டம் ராஜன்(43), கொல்லிமலை ஆரியூர் பகுதியை சேர்ந்த
மரம் வியாபாரி செல்வகுமார் (42) கொல்லிமலை வனவர் ரகுநாதன் (40), உட்பட 3 பேர் சனிக்கிழமை இரவு கொல்லிமலையில் இருந்து பொலிரோ காரில் ராசிபுரம் நோக்கி சென்றனர்.

இராசிபுரம்: நிழல் கூடத்தில் கார் மோதி விபத்து

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார்பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான போலிரோ கார்

மேலும் இந்த பகுதியில் விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

 

 

From around the web