பெரும் சோகம்.. கனடா போலீசாரின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்.. தீரா துயரத்தில் சென்னை தம்பதியினர்!

 
கனடா விபத்து

சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி தம்பதியினர் கடந்த வாரம் கனடா விட்பி மெயின் ரோடு 401-ல் ஏற்பட்ட திடீர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன், 3 மாத குழந்தை ஆதித்யா விவானும் சம்பவ இடத்திலேயே இறந்தார், குழந்தையின் பெற்றோர் கோல்குநாத் மற்றும் அஷ்விதா பலத்த காயங்களுடன் தப்பினர்.

இந்நிலையில், குழந்தை ஆதித்ய விவானின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. ஆதித்ய விவான் பிறந்ததும் பாட்டி மகாலட்சுமி தான் முதலில் கைகளில் பிடித்தார், தாத்தா மணிவண்ணன் தான் முதலில் நெற்றியில் முத்தமிட்டார் என்று உறவினர் பிருந்தா கூறினார். சமீபத்தில் ஓய்வு பெற்ற தம்பதியினர் விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து கனடா வந்ததாக கூறப்படுகிறது.

சரக்கு வாகனத்தை தவறான பாதையில் போலீசார் அதிவேகமாக துரத்தியதால் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தம் 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான அதே வாகனத்தில் குழந்தை ஆதித்யாவின் பெற்றோர் கோகுல்நாத் (33), அஷ்விதா (27) ஆகியோரும் பயணம் செய்தனர். இருவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

இருவருக்கும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது. இருவரும் தற்போது கருத்து தெரிவிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. போலீசரால் துரத்திச் செல்லப்பட்ட சரக்கு வாகனத்தின் 21 வயது ஓட்டுனரும் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த 38 வயதுடைய பயணி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் உள்ளூர் போலீசார் விரிவான விசாரணை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web