பெரும் அதிர்ச்சி.. வெறிநாய்கள் கடித்ததில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 25 ஆடுகள் உயிரிழப்பு!

 
ஒட்டன்சத்திரம் ஆடுகள்

ஒட்டன்சத்திரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 25 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொங்கப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சண்முகசந்திரம், கடந்த 40 ஆண்டுகளாக பட்டண என்ற இன ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்க்க சென்ற இவர் சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 25 ஆடுகளை கூடாரத்தில் பூட்டி விட்டு சென்றார்.

இந்நிலையில், கூடாரத்தை கண்ட வெறிநாய்கள், கூடாரத்திற்குள் புகுந்து, 25 ஆடுகளை கடித்து குதறின. ஆடுகளின் சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்த ஒருவர் நாய்களை விரட்டினார். ஆனால், அனைத்து ஆடுகளும் இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஆடுகளின் உரிமையாளர் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web