சோகம்... ஆட்டிசம் குறைபாட்டால் அவதிப்பட்ட குழந்தை.. தாய் செய்த கொடூரம்!
பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு 3 1/2 வயதாகிறது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியரின் இரட்டை மகள்களில் ஒருவருக்கு ஆட்டிய குறைபாடு உள்ளது. மற்றொரு குழந்தைக்கு லேசான பாதிப்பு உள்ளது. கடந்த வியாழன் அன்று அந்த பெண் தனது குழந்தைகளில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

ஆட்டிசம் காரணமாக குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டதால் குழந்தையை கொன்றதாக தாய் தெரிவித்துள்ளார். குழந்தையை கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்தார். பின்னர் அந்த பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் தந்தை இதுவரை வெளிநாட்டில் இருந்து திரும்பாததால் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தாய் சிறைக்கு சென்றார். மற்றொரு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
