பெரும் அதிர்ச்சி.. நெஞ்சில் சொருகிய அம்பு.. சரியான நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்!

 
ஜோதி நந்தா

சத்தீஸ்கர் மாநிலம் பிஜேபூர் மாவட்டம் உசூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின சிறுவன் ஜோதி நந்தா (வயது 17). சம்பவத்தன்று சிறுவன் வில் அம்புடன் விளையாடிக் கொண்டிருந்த போது அம்பு ஒன்று அவரது பக்கவாட்டில் பாய்ந்தது. மார்பில் பாய்ந்த அம்பு சிறுவனின் கல்லீரலுக்கு அடியில் சிக்கியது. இதையடுத்து, உடனடியாக அவரை கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பத்ராசலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தெலுங்கானா மாநிலம் வாரங்கல் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது இதயத்துக்கு மிக அருகில் நுரையீரலின் பக்கவாட்டு பகுதியில் அம்பு உடைந்திருந்தது உறுதியானது.

சுமார் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு நிம்ஸ் மருத்துவர்கள் அம்பை பத்திரமாக அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.  அம்பு எறிந்து ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த பணியை வெற்றிகரமாக முடித்த டாக்டர் அமரேஸ்வர ராவ் மற்றும் டாக்டர் பீரப்பா ஆகியோரின் நிம்ஸ் குழுவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!