மது விற்பனையில் போட்டி.. பார் உரிமையாளர் வெட்டிக்கொலை!

 
முருகன்

மது விற்பனையில் போட்டா போட்டி ஏற்பட்டதால், பார் உரிமையாளரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் மொத்த பெரியகுளம் பகுதியையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி கிராமம். இங்குள்ள தேவர் தெருவை சேர்ந்த முருகன், 45, ஜெயமங்கலத்தில் இருந்து குள்ளபுரம் செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். அதே வடுகபட்டி தேவர் தெருவை சேர்ந்தவர் பிரபுதேவா.இவருக்கு 35 வயது. தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பிரபுதேவா பார் நடத்தி வருகிறார். உறவினர்களான முருகனுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே வியாபாரத்தில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் தேனி அருகே பின்னதேவன் பட்டியில் பிரபுதேவா நடத்தி வரும் டாஸ்மாக் பாரில் அரசு அனுமதியின்றி 900 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தேனி அல்லிநகரம் போலீசார் சோதனை செய்து கைப்பற்றினர். இதனிடையே, கடந்த மே 1ம் தேதி பாரில் சட்டவிரோதமாக மது விற்றதாக வடுகபட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரனையும் அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் குறித்து, தனது உறவினரும், டாஸ்மாக் பார் உரிமையாளருமான முருகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக பிரபுதேவாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர் மீது, பிரபுதேவா கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு வடுகபட்டி தியேட்டர் அருகே முருகனுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபுதேவா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து டாஸ்மாக் பார் உரிமையாளர் முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அப்போது பிரபுதேவா அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெரியகுளம் டி.எஸ்.எல்.யூ.சுரகுமாரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரபுதேவாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வடுகபட்டி பகுதியில் பதற்றம் நிலவியதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web