பெரும் அதிர்ச்சி.. பைக் வாங்குவதற்காக பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை!

 
குழந்தை உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மு பெஹ்ரா. அவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள். மேலும், அவரது இரண்டாவது மனைவிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தர்மு பெஹ்ரா தனது இரண்டாவது மனைவி குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பத்து நாட்களே ஆன ஆண் குழந்தையை இடைத்தரகர்கள் மூலம் விற்றார்.

குழந்தை

பின்னர், குழந்தையை விற்று கிடைத்த பணத்தில் புதிய பைக் வாங்கினார். அவரும் புதிதாக வாங்கிய பைக்கில் குடும்பத்துடன் சுற்றி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையின் தந்தை புதிய பைக் வாங்குவதற்காக குழந்தையை விற்றது உறுதியானது.

போலீஸ்

இதைத்தொடர்ந்து போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தர்மு மற்றும் குழந்தையின் இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web