பெரும் அதிர்ச்சி.. பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. தீக்கிரையான பல லட்சம் மதிப்பிலான பொருட்கள்!

 
 பனியன் நிறுவனம்

தனியார் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பனியன் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். மேலும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில், நிறுவனம் முழுவதும் தீ பரவியது.

இதையடுத்து தகவலறிந்து  திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகள் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் 

From around the web