விழுப்புரத்தில் பெரும் அதிர்ச்சி.. கள்ளச்சாரயத்திற்கு மீண்டும் ஓர் உயிர் பலி!

 
ஜெயராமன்

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கள்ளச்சாரயம் அருந்தி இன்று உயிரிழந்துள்ளார்.  சமீபத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 5 முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம்

இந்த நிலையில், குமாரமங்கலத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு, புதுச்சேரி மாநிலம் மதுக்கரை பகுதியை சேர்ந்த  பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கள்ளச்சாரயம்  வாங்கி கொடுத்துள்ளார். ஜெயராமன், முருகன், சிவச்சந்திரன் ஆகியோர் குடித்துள்ளனர். கள்ளச்சாரயம் குடித்த ஜெயராமன் உட்பட 3 பேருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது உறவினர்கள் உடனடியாக அவர்களது உறவினர்கள் 3 பேரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர், முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,  ஜெயராமன், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஜெயராமன் இறந்த பிறகு கள்ளச்சாரயம் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்த  முருகனை திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூறுகையில்,"புதுச்சேரியில் இருந்து வாங்கிய கள்ளச்சாரத்தை ஜெயராமன், முருகன், சிவச்சந்திரன் ஆகியோர் குடித்துள்ளது தெரியவந்துள்ளது.அதன் அடிப்படையில் முருகன் தான் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாரயம் வாங்கியது தெரியவந்துள்ளது. முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதனிடையே மது அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்,'' என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web