பெரும் அதிர்ச்சி.. நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து.. தலைதெறிக்க ஓடிய பயணிகள்!

 
மாநகர பேருந்து

சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு மாநகரப் குளிர்சாதன பேருந்து இன்று (ஜூலை 2) அடையாறு டிப்போ அருகே எல்பி சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, ​​பேருந்தின் கியர் பாக்ஸில் இருந்து திடீரென புகை வருவதைக் கண்ட டிரைவர், உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டார்.

இதையடுத்து சில நொடிகளில் மாநகரப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பரபரப்பான அடையாறு சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அந்த சாலையில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.  மாநகரப் பேருந்தில் தீப்பிடித்ததும்,  பேருந்தில் இருந்து பயணிகள் வேகமாக வெளியேறினர், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமின்றி உயிர் தப்பினர்.

அடையாறு டெப்போ அருகே மாநகர பேருந்து தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web