பெரும் அதிர்ச்சி.. வடமாநில இளைஞர் கொடூரமாக குத்தி கொலை.. போராட்டத்தில் குதித்த சக தொழிலாளர்கள்!

 
ஆகாஷ்குமார்

திருப்பூரில்  வடமாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கணியம்பூண்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆகாஷ்குமார் (22). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று வழக்கம் போல் பணி முடிந்து தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை சூழ்ந்து கொண்டு செல்போனை பறிக்க முயன்றனர். ஆகாஷ்குமார் செல்போனை கொடுக்க மறுத்ததால், மூன்று பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, நண்பர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகாஷ்குமார் இன்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சக வடமாநில தொழிலாளர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web