பெரும் அதிர்ச்சி.. ரேபிஸ் தொற்று நோய்.. இளம்பெண் பரிதாபமாக பலியான சோகம்!
கோவையில் தெருநாய் கடித்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி எல்ஜிபி பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண். இவர் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். அப்போது இரண்டு தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டன.

அந்த தெருநாய் ஒன்று இளம் பெண்ணை கடித்தது. இதையடுத்து, அந்த இளம் பெண் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்துளள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனையில் பரிசோதித்தபோது. அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
