பெரும் அதிர்ச்சி.. பணம் எண்ணும் இயந்திரத்தில் புகுந்த பாம்பு.. பீதியில் அலறிய வங்கி ஊழியர்கள்!

 
வங்கியில் பாம்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் ஐ.ஏ.எப். சாலையில் இந்துக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு அரசு வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை காசாளர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து வங்கியில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்தில் புகுந்த பாம்பை வெற்றிகரமாக மீட்டனர். பிடிபட்டது சுமார் 3 அடி நீளம் கொண்ட கொம்பேரி மூக்கன் வகை பாம்பு என வனத்துறையினர் தெரிவித்தனர். விஷமற்ற பாம்பு மரம் ஏறும் தன்மை கொண்டது.

வங்கி அருகே உள்ள மரத்தில் இருந்து ஸ்டோர் ரூம் வழியாக புகுந்த பாம்பு, பணம் எண்ணும் இயந்திரத்தில் புகுந்திருக்கலாம் என தெரிகிறது. வன ஆர்வலர்கள் பாம்பை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். வங்கியில் புகுந்த பாம்பால் பெரும் பரபரப்பு நிலவியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web