பெரும் அதிர்ச்சி.. கோயில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளர் பரிதாப பலி!

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பராமரிப்பு பணி நடந்தது. இப்பணியில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கோவில் கோபுரத்தில் ஏறியவர் திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் பழனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் பழனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பழனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை திருவான்மியூர் தரிசனீஸ்வரர் கோயிலில் உள்ள பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!