பெரும் அதிர்ச்சி.. அடுக்குமாடியில் மயங்கி கிடந்த வாலிபர்கள்.. உற்று பார்த்து ஷாக் ஆன போலீசார்!

 
போதை மாத்திரை

சேலம் மாவட்டம் ஆனந்தபாலம் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்காக மாநகராட்சியால் 5 மாடி அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், சில இளைஞர்கள் அடிக்கடி உள்ளே புகுந்து மது அருந்துவது, கஞ்சா, குட்கா, போதை ஊசி போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று இரண்டு வாலிபர்கள் மாடிக்கு சென்று கைகளில் போதை ஊசியை போட்டு போதையில் மயங்கிய நிலையில் படுத்துள்ளனர். அங்கிருந்த ஒருவர், அவர்களுக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ பதிவு செய்தார். பின்னர் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் போதை ஊசியை பயன்படுத்திய இளைஞர்கள் யார்? எந்த பகுதியில் இருந்து? விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்

மேலும், மருந்து ஊசி, மாத்திரைகள் எப்படி கிடைக்கும்? கஞ்சா சப்ளை செய்வது யார்? உளவுத்துறை மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!