பெரும் அதிர்ச்சி.. ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு!

 
சங்கர சுப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த மே 13ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே 16) உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், மூணடைப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருத குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பு (32) கூலி வேலை செய்து வருகிறார். தனது பூர்வீகச் சொத்தில் பங்குதாரர்கள் பங்கீடு செய்யவில்லை எனக்கூறி மணடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், மக்கள் குறை தீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த சங்கர சுப்பு, கடந்த மே 13ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த உதவி ஆய்வாளர் அப்துல் ஹமீது உள்ளிட்ட போலீஸார் அவரை மீட்டு தீக்காயப் பிரிவில் அனுமதித்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கரசுப்பு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2017ல், இதே நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், கந்து வட்டி கொடுமையால், மனைவி, குழந்தைகள் உட்பட, நான்கு பேர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தற்கொலை சம்பவங்களை தடுக்க நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கொலை

மேலும், தற்கொலை முயற்சியை உடனடியாக தடுக்க நுழைவு வாயில் அருகே குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பல தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற சங்கரசுப்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web