பெரும் சோகம்... அரசுப்பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து 5 குழந்தைகள் காயம்!

பெரும் சோகம்... அரசுப்பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து 5 குழந்தைகள் காயம்! 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் மேற்கூரை இடிந்து வகுப்பறையில் உள்ள மாணவ, மாணவிகள் மீது விழுந்துவிட்டது. 

பெரும் சோகம்... அரசுப்பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து 5 குழந்தைகள் காயம்! 

இதில் பள்ளியில் படித்த 5 மாணவ மாணவிகள் காயங்கள் ஏற்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 பெரும் சோகம்... அரசுப்பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து 5 குழந்தைகள் காயம்! 

புதிதாக ரூ. 33 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 6 ம் வகுப்பை சேர்ந்த ரஷித், கோபிகா, தேன் மொழி, கோகுல், வைசாலி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?