பெரும் சோகம்.. சுற்றுலாவுக்கு சென்று கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி!

 
ஜான்வி

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் முலேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கந்தர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து விளையாடினர். 

ஜான்வி

அப்போது கடலில் திடீரென ராட்சத அலை எழுந்த நிலையில், அதில் சிக்கி 8 பேர் கடலில் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனால் தண்ணீரில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜான்வி

கடலில் தத்தளித்த 2 இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 6 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 4 பேர் இளம் வயதுடையவர்கள். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ராஜேஷ் (33), யோகேஷ் (19), துளசிபென் (20), ஜான்வி (3), ஆர்யா (2) மற்றும் ரின்கல் (15) ஆகிய 6 பேர் சம்பவத்தில் உயிரிழந்தனர் என மீட்பு குழு கூறியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளது குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளனது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web