தந்தை கண் முன்னே 2 குழந்தைகள் பலியான சோகம்... நீச்சல் பழகிய போது விபரீதம்!

 
பிரியா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பேயம்பட்டியில் சக்திவேல் (39) - பிரியா (34) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மோகன கிருஷ்ணன் (8) என்ற மகனும், வர்ஷனா (6) என்ற மகளும் இருந்தனர். சக்திவேல் ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார்.

தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் கிருஷ்ணன், வர்ஷனா இருவரும்  வீட்டிலேயே விளையாடி வந்துள்ளனர். அந்த வகையில் நேற்று வீட்டருகே உள்ள கிணற்றில் சக்திவேல் குழந்தைகளுடன் குளிக்கச்சென்றார். அப்போது கிணற்றில் குழந்தைகளுக்கு அவர் நீச்சல் கற்றுத் தந்தார். 

பிரியா

மோகன கிருஷ்ணன் உடலில் டியூப் கட்டிக்கொண்டு நீச்சல் கற்றுக்கொடுத்தார். அதேபோல் டியூப் கட்டிக் கொண்டு வர்ஷனா கிணற்றில் குதித்தபோது, மோகன கிருஷ்ணன் மீது விழுந்துள்ளார். அப்போது டியூப் நழுவியதால் குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். சக்திவேல் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து வருவதற்குள் குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கினர். 

பிரியா

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து குழந்தைகளை தேடினர். சிறிது நேரம் தேடலுக்கு பிறகு இரு குழந்தைகளின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளையில் ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web