பெரும் துயரம்.. பிறந்த குழந்தையை பார்த்து விட்டு திரும்பிய காவலர் விபத்தில் உயிரிழப்பு!

 
மனைவி

ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குணாராஜ் (35), சென்னை வளசரவாக்கத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். குணாராஜுக்கு திருமணமாகி அவரது மனைவி கருவுற்று இருந்தார். இந்நிலையில் காவலர் குணாராஜ் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது இந்த தம்பதிக்கு முதல் குழந்தையாகும்.

மனைவி

இதனையடுத்து, தனது குழந்தையை பார்ப்பதற்காக காவலர் குணாராஜ் விடுமுறை எடுத்து விட்டு சென்னையில் இருந்து பரமக்குடிக்கு சென்றார். அங்கு அரசு மருத்துவமனையில் தனது குழந்தை, மனைவியைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் சொந்தஊரான ராமநாதபுரத்திற்கு பைக்கில் சென்றார்.

மனைவி

அப்போது வழியில் எதிரே வந்த அரசு பேருந்து, குணாராஜ் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காவலர் குணாராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web