பரபரப்பு... டென்மார்க் பிரதமர் மீது பயங்கர தாக்குதல்!

 
 மெட் ஃபிரடெரிக்சன்

டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன். அவர் டென்மார்க்கின் மத்திய கோபன்ஹேகனில் இருந்தபோது ஒருவரால் தாக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்ற போது மர்ம நபரால் தாக்கப்பட்டார். அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரை தாக்கிய நபரை டென்மார்க் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது, என்று தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இந்த சம்பவத்தால் பிரதமர் சற்று அழுத்தமாக இருந்தார். பின்னர், அவர் பாதுகாப்பு வளையத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக போலீசார் தெரிவித்தனர்.

டென்மார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் ஐரோப்பிய யூனியன் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர், ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோ தாக்கப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web