பசுமை காவலராய்... அசத்தும் திருச்சி கலெக்டர்... குவியும் பாராட்டுக்கள்!

 
திருச்சி கலெக்டர் ஆட்சியர் மரம்

மரம் தான்.. மரம் தான்... எல்லாம் மரம் தான்... மறந்தான்.. மறந்தான்.. இதை மனிதன் மறந்தான் என்பார்கள். ஆணி வேரே மரங்களுக்கு அச்சாரம். மரங்கள் மனித வாழ்வியலின் ஆணிவேர். சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் இயற்கையின் அருட்கொடை மரங்கள். இவ்வுலகில் ஓரறிவு தொடங்கி ஆறறிவு கொண்ட மனிதன் வரை வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பவை மரங்கள் என்றால் அது மிகையல்ல.

இன்றைய சூழ்நிலையில் மனிதனின் தேவைகளுக்காக ஒரு இடத்தை கைப்பற்றும் பொழுது அவ்விடத்தில் உள்ள மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்படுவது நமது அடுத்த சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இத்தகைய சூழலை தவிர்ப்பதற்காகவும், மாற்று வழியை ஏற்படுத்தும் வகையிலும் வேளாண் துறையினர் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு பல ஆண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மரத்தை வெட்டுவதை காட்டிலும், அதனை குறிப்பிட்ட முறையில் வேருடன் பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு அதற்கு உயிர் தர முடியும் என்ற தீர்வை கண்டனர் கண்டு பிடிப்பு மட்டும் போதுமா?

அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டாமா? கொடுத்திருக்கிறார்கள்.

மரம்

ஆம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இட தேவைக்காகவும், வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பக்க நிலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்கு இருந்த வேம்பு, புளிய மரம் உள்ளிட்ட மரங்கள் வேருடன் பிடுங்கி ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் திருச்சி மாவட்ட நிர்வாகத்தினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஜேசிபி உதவியுடன் அங்கு ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ள குழியில் நடப்படுகிறது. இப்பணியில் ஈடுபட்டு வருபவர்கள் திருச்சி குமுளூர், வேளாண் கல்வி நிறுவனத்தினர். 

மரங்கள் நம் வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்பதால் இது போன்ற வெட்டப்படும் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டு, வேர்களை செம்மைப்படுத்தி, மற்றொரு இடத்தில் நடுவதற்கான இடத்தை தயார் செய்து ஐந்துக்கு ஆறு என்ற அளவில் குழி தோண்டி நடலாம் என்பதை காணக் கண்கோடி வேண்டும்.  

திருச்சி மரம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இம்மரங்களை பாதுகாப்பதற்கு இது போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பணிகளுக்காக இடம் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, அங்கு இருக்கும் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி சாய்க்காமல், வேருடன் பிடுங்கி மறு நடவு செய்யும் பணியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முனைப்புடன் செயல்படுகிறார்.

இது மட்டுமின்றி பசுமை திட்டங்களான ஒரு கிராமம், ஒரு பண்ணையம் மற்றும் மியாவாக்கி காடுகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வரிசையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துள்ள இத்தகைய முயற்சி சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியருக்கு நாமும் ஒரு சபாஷ் போடுவோமே.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web