இன்று சென்னை முழுவதும் குறைதீர்க்கும் முகாம்!!

 
ரேஷன்கார்டு

ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், மொபைல் எண் இணைப்பு முதியோர் அங்கீகாரச் சான்று இவைகளுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் இன்று சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்ட  செய்தி குறிப்பில்,  தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

குறை தீர்க்கும் முகாம்

அதன்படி, ஜீன் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று  காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.  இந்த முகாம்களில்  குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் .  

ரேஷன்கார்டு குறைதீர்க்கும் முகாம்

அத்துடன் ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாதவர்கள் அங்கீகாரச் சான்று பெற்றுக் கொள்ளாலாம். ரேஷன்   கடைகளின் செயல்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவிக்கலாம்.  சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது”. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web