மளிகை கடையில் கைவரிசை.. ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபேஸ்.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

 
அழகர் கடை

திண்டுக்கல் மாவட்டம் மதுரை சாலையில் வன அலுவலகம் எதிரே அழகர் என்ற மளிகைக்கடை உள்ளது. இந்த கடை நத்தம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த அழகர் என்கிற சந்தனம் (45) என்பவருக்குச் சொந்தமானது. இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை அழகர் கடையை திறக்கச் சென்றபோது, ​​கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடைக்குள் சென்று பார்த்தபோது, ​​கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, ​​கடைக்குள் 2 மர்ம நபர்கள் இருப்பதும், பணப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web