வைரல் வீடியோ... மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசி வாங்கும் மணமகன்!

 
திருமணம்


 
பெண்கள் முன்னேற்றம், சம உரிமை, சம ஊதியம் என பல இடங்களில் பேச்சுக்கள் , முற்போக்கு சிந்தனைகள் அதிகரித்து வருகின்றன.ஆனால் வீடுகளை பொறுத்தவரை ஆண் ஆள்பவனாகவும், பெண் பேணுபவளாகவுமே இருந்து வருகிறார்கள். சமத்துவம் என்பது பேச்சளவில் தான் இருந்து வருகிறது. இதனை புரட்சிகர சிந்தனையுடன் ஒரு சிலர் அணுகி அதன்படி நடந்தும் வருகின்றனர். அந்த வகையில் திருமண மேடையில் மணப்பெண் ஒருவர் மணமகனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.

அதே போல் மணமகனும் மணமகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இந்நிகழ்வு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . திருமணம் என்றாலே அனைவருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.  தற்போது திருமணங்கள் பலவும் மிக நகைச்சுவையாகவே அரங்கேறி வருகிறது.

5வது திருமணம்


குறிப்பாக சிலருடைய திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  இந்த வீடியோவை பொறுத்தவரை மணப்பெண் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கையும், மரியாதையும் கொடுக்கிறார். இதற்கு பதிலாக மாப்பிள்ளை மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். அதாவது ஆண் பெண் வேறுபாடு இல்லை எல்லாரும் சமம் என்பதை செயலில் நிரூபித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web