குரூப் 4 தேர்வு... சான்றிதழ் பதிவுக்கு நவம்பர் 14 வரை அவகாசம்!

 
TNPSC குரூப் 1 ரிசல்ட் வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் விளையாட்டு வீரர் ஒதுக்கீடு கோரிய தேர்வர்கள், தங்களது சான்றிதழ்கள் மற்றும் தேவையான படிவங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அக்.22 அன்று வெளியான முடிவுகளின் படி, விளையாட்டு வீரர் பிரிவில் இடஒதுக்கீடு கோரி 1,280 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் சான்றிதழ்களை நவம்பர் 5க்குள் பதிவேற்றும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை மொத்தம் 590 பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றி உள்ளனர்; மீதமுள்ள 690 பேர் எந்த ஆவணங்களையும் பதிவேற்றவில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஒரு நாள் தான்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

மேலும், சிலர் விளையாட்டு போட்டி விபரங்களுக்கான உரிய படிவங்களைப் பதிவேற்றாமல், சான்றிதழ்கள் மட்டும் சேர்த்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. உரிய வடிவில், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு அல்லது சங்கம் வழங்கிய சான்றிதழ்கள் மற்றும் அதிகாரிகளின் கையொப்பத்துடன் கூடிய படிவங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று தேர்வாணையம் எச்சரித்துள்ளது.

tNpsc

விளையாட்டு வீரர்கள் பிரிவில் இடஒதுக்கீடு பெற விரும்பும் தேர்வர்கள், நவம்பர் 14க்குள் அவசியமான ஆவணங்களை சரியாகப் பதிவேற்ற வேண்டும். காலக்கெடு முடிந்த பின், முழுமையான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் அந்த பிரிவில் கருதப்படமாட்டாது என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!